
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அணியுடன் இணைந்துள்ளார்.
Daddy's Home and he is ready to reign again!
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 18, 2024
Virat Kohli checked in to Namma Bengaluru, and we can't keep calm. Happy #Homecoming, @imVkohli!#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/KLWKz788wx