நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ்டியன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் நிச்சயம் விளையாடுவர் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன். ஆஸ்திரேலிய அணிக்காக 2012ஆம் ஆண்டு அறிமுகமான இவர் தொடர்ச்சியான சரிவு மற்றும் காயம் காரணமாக கடந்த 2017அம் ஆண்டு அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.
அதன்பின் பிக்பேஷ் மற்றும் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், இவருக்கு தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளார்.
Trending
இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேனியல் கிறிஸ்டியன் இடம்பெறுவதை அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கள் உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜஸ்டின் லங்கர்,“டேனியல் கிறிஸ்டியன் ஒவ்வொரு முறையும் தான் பங்கேற்கும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் விளைவாகவே தற்போது அவர் நான்காண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
மேலும் அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இத்தொடரில் அவரது ஆட்டம் நிச்சயம் எங்களுக்கு பயனளிக்கும். அதனால் நாளைய போட்டியில் அவர் களமிறங்குவார் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now