
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லி. இதில் டெவான் கான்வே 11 ரன்னிலும், டாம் லேதம் 17 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.