ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. இவர் டெஸ்டில் விளையாடுவதைப் போல ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது கிடையாது. இதனால்தான், இலங்கை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Trending
அவருக்கு தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் 6 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை என முதற்கட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், ரிஷப் பந்த் ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்க முடியாது என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ஆகையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பந்திற்கு மாற்றாக புதுக் கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
டெல்லி அணியில் கேப்டன்ஸிக்கான ஆப்ஷனில் பிரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் இருக்கிறார்கள். இதில், டேவிட் வார்னர் தற்போது முரட்டு பார்மில் இருப்பதால், இவரை கேப்டனாக தேர்வு செய்ய டெல்லி கேபிடல்ஸ் அணி முடிவு செய்திருப்பதாகவும் மேலும், மாற்று விக்கெட் கீப்பராக சர்பரஸ் கானை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now