பார்டர் கவாஸ்கர் தொடர்: ஓய்வு முடிவை திரும்பப் பெரும் டேவிட் வார்னர்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கோப்பையை வென்று சாதனைப்படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றில் அடைந்த அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது.
இதனையடுத்து இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் வார்னர் ஓய்வை அறிவித்திருந்தார்.
Trending
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டேவிட் வார்னர், “ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இதனை நான் விளையாட்டுக்காக கூறவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் எனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, ஆஸ்திரேலிய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. அதனால், நானும் அவர்களுடன் இணைந்து விளையாடும் அளவுக்குத் தயாராகவே இருக்கிறேன்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக உண்மையில் என்னுடைய தேவை ஆஸ்திரேலிய அணிக்கு இருப்பின், ஷீல்டு அணிக்காக அடுத்த போட்டியில் விளையாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு யோசித்து எடுத்த முடிவு தான். ஆனால், அணிக்கு என்னுடைய பங்களிப்பு தேவைப்பட்டால் எனது ஓய்வு முடிவை திரும்ப பெறவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 110 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் ஒரு சதம், 28 அரைசதங்கள் என 3,277 ரன்களைக் குவித்துள்ளார். மேற்கொண்டு 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள், 33 அரைசதங்களுடன் 6,932 ரன்களையும், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் என 8,786 ரன்களையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now