 
                                                    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் மிடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 93 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய குல்பதீன் நைப் 47 ரன்களிஅயும், ஷாய் ஹோப் 36 ரன்களையும், தசுன் ஷனகா 34 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
இதில் அரைசதம் கடந்து அசத்திய ஆண்ட்ரிஸ் கஸ் 78 ரன்களையும், கைல் மேயர்ஸ் 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        