லியாம் டௌசன் அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்துவார் - நாசர் ஹுசைன்!
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் அணியில் இடம்பிடித்துள்ளது அணியின் பேட்டிங் வரிசையில் கூடுதல் பலமாக இருக்கும் என முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதன்மூலம் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் லியாம் டௌசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த சோயப் பஷிர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியதை அடுத்து லியாம் டௌசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லியாம் டௌசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அணியின் பேட்டிங் வரிசையில் கூடுதல் பலமாக இருக்கும் என முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நாசர் ஹுசைன், “நீங்கள் ஷோயப் பஷீர் குறித்து வருத்தப்படுகிறீர்கள், ஆனால் அதுதான் ஆட்டத்தின் இயல்பு. ஒருவருடய காயம் வேறொருவருக்கான வாய்ப்பைத் தருகிறது. மேலும் அந்த வாய்ப்பை பெற்றிருக்கும் லியாம் டௌசன் இதன்மூலம் தனது பந்துவீச்சில் மட்டுமில்லாமல் ஆல் ரவுண்டராகவும் திறனை காட்ட வாய்ப்பு உள்ளது. மேலும் அவர் 8ஆவது இடத்தில் களமிறங்கினால், அது மிகவும் வலுவான கீழ் வரிசையின் தொடக்கமாக இருக்கலாம்.
அதேசமயம் இப்போட்டியில் கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கும் பட்சத்தில் அவர் 9ஆம் இடத்திலும், லார்ட்ஸில் சிறப்பாக செயல்பட்ட பிரைடன் கார்ஸ் 10ஆவது இடத்திலும் களமிறங்குவார்கள். இது அணியின் கீல் வரிசை பேட்டிங்கை வலுப்படுத்தும். மேலும் ஜேக் லீச் குறித்து சில கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் லியாம் டௌசனிடம் ஆல் ரவுண்டருக்கான திறமை இருப்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
லியாம் டௌசன் கடந்த 2017ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள டௌசன் பேட்டிங்கில் அரைசதம் உள்பட 84 ரன்களையும், பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேசமயம் முதல் தர கிரிக்கெட்டில் 212 போட்டிகளில் 18 சதம் 56 அரைசதங்களுடன் 10731 ரன்களையும், பந்துவீச்சில் 371 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now