-mdl.jpg)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 14 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 8 ரன்களிலும், கேப்டன் ஷான்டோ 9 ரன்களிலும் நடையைக் கட்டினர். மோமினுல் ஹேக் 5 ரன்னில் வந்து வேகத்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹொசைன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.