Advertisement

IND vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Advertisement
IND vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்!
IND vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 17, 2024 • 10:43 AM

Bharathi Kannan
By Bharathi Kannan
October 17, 2024 • 10:43 AM

 

Trending

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று (அக்டோபர் 16) தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. 

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளார். இப்போட்டிக்கான் இந்திய அணியில் ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான் மற்றும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடாத கேன் வில்லியம்சன்னிற்கு பதிலாக வில் யங் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கத்திலேயே நியூசிலாந்தின் பந்துவீச்சை கணிக்கமுடியாமல் ரன்களைச் சேர்க்க தடுமாறினர். அதன்பின் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மாவை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி வில்லியம் ஓ ரூர்க்கின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சர்ஃப்ராஸ் கானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரிஷப் பந்த் இணை விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் மழை பெய்ய ஆரம்பித்த காரணத்தால் இப்போட்டியானது தடைபட்டுள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 8 ரன்னுடனும், ரிஷப் பந்த் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ, மேட் ஹென்றி, வில்லியம் ஓரூர்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம்(கே), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளென்டெல், கிளென் பிலிப்ஸ்,மேட் ஹென்றி, டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

TAGS IND Vs NZ IND Vs NZ 1st Test Indian Cricket Team Virat Kohli Sarfaraz Khan Tim Southee Tamil Cricket News Tim Southee Sarfaraz Khan Indian Cricket Team India Vs Zealand
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement
Advertisement