
நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில், அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை வரவுள்ள ஐபிஎல் தொடரின் செயல்பாட்டை வைத்து தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்பின் 30 வீரர்களைத் தேர்வு செய்துள்ள பிசிசிஐ அவர்களின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னைப்பொறுத்த வரையில் அனைத்தையும் காட்டிலும் என் தந்தைதான் முக்கியம். அவரால் தான் நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். நான் சாதித்த அனைத்தும் எனது தந்தையால் தான். அவர் உடல்நலம் சரியில்லாத நேரத்தில் நான் அவருடன் இல்லை என்றால், நான் எப்படிபட்ட மகன்? என்பது எனக்கு தெரியவில்லை.