
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷமைன் காம்பெல் - சின்னலே ஹென்றி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சாரிவிலிருந்து மீட்டெடுத்தன்ர். இதில் ஷமைன் காம்பெல் 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த சின்னலே ஹென்றியும் 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களியும், தீப்தி சர்மா 39 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.