கேத்ரின் பிரண்ட், நிடா தாரின் சாதனையை முறியடிப்பாரா தீப்தி சர்மா?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Deepti Sharma Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வீராங்கனை தீப்தி சர்மா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் நிடா தார் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல்வும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யவும் முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் தீப்தி சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் தீப்தி சர்மா வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தால், இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் தனது 24 விக்கெட்டுகளை நிறைவு செய்வார். இதன் மூலம் இரு அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையைப் படைப்பார். தற்போது கேத்ரின் ஸ்கைவர்-பிரண்ட் 19 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
- கேத்தரின் ஸ்கைவர்-பிரண்ட் - 19 போட்டிகளில் 23 விக்கெட்டுகள்
- சோஃபி எக்லெஸ்டோன் - 18 போட்டிகளில் 22 விக்கெட்டுகள்
- தீப்தி சர்மா - 22 போட்டிகளில் 22 விக்கெட்டுகள்
- ரேணுகா சர்மா - 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள்
இது தவிர, இப்போட்டியில் தீப்தி சர்மா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றும் பட்சத்தில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 145 விக்கெட்டுகளை நிறைவு செய்வார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையைப் பெறுவார். தற்போது பாகிஸ்தானின் நிடா தாரும் தீப்தி சர்மா இருவரும் தலா 144 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளனர்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள்
- மேகன் ஷட் - 123 போட்டிகளில் 151 விக்கெட்டுகள்
- நிதா டார் - 160 போட்டிகளில் 144 விக்கெட்டுகள்
- தீப்தி சர்மா - 127 போட்டிகளில் 144 விக்கெட்டுகள்
- சோஃபி எக்லெஸ்டோன் - 98 போட்டிகளில் 138 விக்கெட்டுகள்
- ஹென்றிட் இஷிம்வே - 107 போட்டிகளில் 132 விக்கெட்டுகள்
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now