மகளிர் டி20 தரவரிசை: தீப்தி சர்மா, ராஜெஸ்வரி முன்னேற்றம்!
மகளிருக்கான டி20 தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் தீப்தி சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Deepti Sharma Climbs To Second Spot In ICC Women's T20I Bowler Rankings, Closes In Towards Pole Posi (Image Source: Google)
மகளிர் டி20 போட்டியின் பந்து வீச்சாளர் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் முன்னேறி 13ஆவது இடத்தில் உள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News