டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரர்களின் உபகரணங்கள் திருட்டு; அதிர்ச்சியில் வீரர்கள்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களுடைய 16 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வராமாக போட்டிக்கு போட்டி கடைசி ஓவர் வரை சென்று முடிவடைந்துள்ளதால், இந்த தொடரில் அனைத்து அணிகளுமே புள்ளி போட்டியளில் முன்னேற்றத்தை காண்பதற்காக கடுமையான போராட்டத்தை அளித்து வருகின்றன.
அந்த வகையில் அனைத்து அணிகளும் போட்டி போட்டு தங்களது வெற்றி கணக்கை உயர்த்தி வரும் வேளையில் இந்த தொடரில் இடம்பெற்று விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டும் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்து மோசமான கட்டத்தில் இருக்கிறது. டெல்லி அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் கேப்டனுமான ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய வேளையில் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவது அந்த அணி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Trending
இந்நிலையில் மேலும் ஒரு விசயம் தற்போது வெளியாகி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நிர்வாகக்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வகையில் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமான மூலம் பயணித்த டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் அந்த அணி வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர், மிடசல் மார்ஷ், பிலிப் சால்ட் மற்றும் யாஷ் தூள் ஆகியோரது கிரிக்கெட் கிட் மற்றும் உபகரணங்கள் ஆகியவை விமான நிலையத்தில் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அணியின் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அதோடு டெல்லி அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த தகவலின் படி, டெல்லி அணியைச் சேர்ந்த ஒரு சில வீரர்களின் கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் பேட் உள்ளிட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விமான நிலையத்தில் திருடப்பட்டு உள்ளதாக அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் டெல்லி வீரர்களது இந்த கிரிக்கெட் உபகரணங்கள் திருட்டு போன சம்பவம் தற்போது அந்த அணியின் நிர்வாகம் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now