
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியாது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த வெற்றியானது மிகவும் அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரரை அந்த அணி அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெலி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.