
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மட்டும் இறுதிசெய்யப்படாமல் இருந்தது.
ஏனெனில் கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த் ஏலத்திற்கு முன்னதாக அணியில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து நடைபெற்று முடிந்த வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேஎல் ராகுல், ஃபாஃப் டூ பிளெசிஸ், கருண் நாயர், அக்ஸர் படேல் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் அக்ஸர் படேலை ஏலத்திற்கு முன்னதாகவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது.