இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டும்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் துவங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி கிட்டதட்ட தகுதிபெற்றுவிட்டது.
இந்திய அணி இப்பொட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 64.06% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 66.67% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 53.3% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு வாய்ப்பு முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணிக்கும் வாய்ப்பு மிகிமிக மிக குறைவு.