
Ajit Agarkar On Mohammed Shami Snub: முகமது ஷமி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வாளர்கள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்தியில் அஜித் அகர்கர் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் சேர்க்கப்படாதது பெரும் விவாதமாக வெடித்துள்ளது. ஏனெனில் கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்ட ஷமி, அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்ததுடன், காயத்திற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார்.