
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆர்சிபி அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரீவிஸுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது.
அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை லுங்கி இங்கிடி வீசிய நிலையில் ஓவரின் 4ஆவது பந்தை டெவால்ட் பிரீவிஸ் எதிர்கொண்டார். அப்போது இங்கிடி லெக் திசையை நோக்கி வீசிய புல்டாஸ் பந்தை எதிர்கொண்ட டெவால்ட் பிரீவிஸ் பந்தை முழுமையாக தவறவிட, அது அவரது பேடில் பட்டது. இதனையடுத்து பந்துவீச்சாளர் இதற்கு அவுட் என அப்பில் செய்ய கள நடுவர் நிதீன் மேனனும் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார்.