
Dhawan-Rohit Sharma pair set to breach Sachin Tendulkar-Sourav Ganguly’s partnership record in ODIs (Image Source: Google)
ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க வீரர்களாக உள்ள ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் இன்று புதிய சாதனையைப் படைப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் 2013 முதல் இதுவரை 110 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 4978 ரன்கள் எடுத்துள்ளார்கள். சராசரி - 45.66 ரன்கள்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஷிகர் தவன் இன்று விளையாடுவார் என ரோஹித் சர்மா கூறியுள்ளார். இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - தவன் ஜோடி 22 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் எடுத்த 4-வது ஜோடி என்கிற பெருமையை அடைவார்கள்.