Advertisement

எம்சிசியின் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை பெற்ற தோனி, யுவராஜ் ரெய்னா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் ஜூலான் கோஸ்வாமி ஆகியோருக்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினரகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Dhoni, Yuvraj, Raina, Mithali & Jhulan awarded MCC life membership
Dhoni, Yuvraj, Raina, Mithali & Jhulan awarded MCC life membership (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 05, 2023 • 10:45 PM

சர்வதேச கிரிக்கெட்டுக்குரிய விதிமுறைகளை உருவாக்கி அதனை கட்டுப்படுத்தி வரும் வேலையை லண்டனில் உள்ள மேரில்போர்ன் கிரிக்கெட் கிளப் செய்து வருகிறது. காலத்திற்கு ஏற்ப கிரிக்கெட்டில் மாற்றங்களையும் நிகழ்த்தி வருகிறது. அப்படிப்பட்ட புகழ்பெற்ற அமைப்பான மேரில்போர்ன் கிரிக்கெட் கிளப், கிரிக்கெட்டுக்கு பேரும், புகழும் உண்டாக்கும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை கொடுத்து அவர்களை கௌரவித்து வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 05, 2023 • 10:45 PM

அந்த வகையில், இந்த ஆண்டு வாழ்நாள் உறுப்பினர்கள் அந்தஸ்து யார் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற 9 பேர் கொண்ட பட்டியலை எம்சிசி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Trending

இந்தியாவிற்கு 3 விதமான உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் எம் எஸ் தோனி. அவருடன் இணைந்து 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக சிறந்து விளங்கியவர் யுவராஜ் சிங். மேலும், உலகக் கோப்பை வெல்ல நாக் அவுட் போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்த சிறந்த ஃபீல்டரான சுரேஷ் ரெய்னாவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். 

இவர்களுடன் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை அளித்து அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்த ஜூலான் கோஸ்வமி ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இயான் மோர்கன், கெவின் பீட்டர்சன், டேல் ஸ்டெயின், ராஸ் டைலர், முகமது ஹபீஸ், மஸ்ரபி மோர்தசா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். 

இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அலஸ்டையர் குக், ஜாக் காலிஸ், ஹர்பஜன் சிங், சாரா டெய்லர் உள்ளிட்ட 18 பேருக்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர்கள் அந்தஸ்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்சிசி புதிய வாழ்நாள் உறுப்பினர்களின் பட்டியல்:

இந்தியா

  • எம்எஸ் தோனி – இந்தியா (2004 – 2019)
  • யுவராஜ் சிங் – இந்தியா (2000 – 2017)
  • சுரேஷ் ரெய்னா – இந்தியா (2005 – 2014)
  • மிதாலி ராஜ் – இந்தியா (1999 – 2022)
  • ஜூலான் கோஸ்வாமி – இந்தியா (2002 – 2022)

இங்கிலாந்து

  • ஜென்னி கன் – இங்கிலாந்து (2004 – 2019)
  • இயான் மோர்கன் – இங்கிலாந்து (2006 – 2022)
  • கெவின் பீட்டர்சன் – இங்கிலாந்து (2005 – 2014)
  • லாரா மார்ஷ் – இங்கிலாந்து (2006 – 2019)
  • அன்யா சுருப்சோல் – இங்கிலாந்து (2008 – 2022)

மற்ற வீரர்கள்

  • ராஸ் டெய்லர் – நியூசிலாந்து (2006 – 2022)
  • எமி சட்டர்வைட் – நியூசிலாந்து (2007 – 2022)
  • முகமது ஹபீஸ் – பாகிஸ்தான் (2003 – 2021)
  • ரிச்சேல் ஹெய்ன்ஸ் – ஆஸ்திரேலியா (2009 – 2022)
  • மெரிசா அகுலிரியா – வெஸ்ட் இண்டீஸ் (2008 – 2019)
  • மஸ்ரபி மோர்தசா – வங்கதேசம் (2001 – 2020)
  • டேல் ஸ்டைன் – தென் ஆப்பிரிக்கா (2004 – 2020)

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement