
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
முன்னதாக வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க பல்வேறு அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ. 26.75 கோடிக்கு அவரை வாங்கியதுடன், அணியின் கேப்டனகாவும் நியமித்துள்ளது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன், அணியை சாம்பியனாக்கியதற்கான எந்தவொரு அங்கிகாரம் மற்றும் தனக்கு கிடைக்க கவனம் ஏதும் கிடைக்கவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.