
கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சர்வதேச இந்திய அணிக்கு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
தோனி இந்திய அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருந்ததால் தினேஷ் கார்த்திக்கால் ரெகுலராக இந்திய அணியில் விளையாட முடியவில்லை. எப்பொழுதெல்லாம் தோனி ஓய்வெடுத்துக் கொள்கிறாரோ அப்பொழுதெல்லாம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக வளம் வந்த தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி வந்தார்.
தோனியின் ஓய்விற்குப்பின் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இவரால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாட முடியவில்லை. மேலும் வயதான தினேஷ் கார்த்திக்க்கை தேர்ந்தெடுப்பதற்கு பதில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுத்தால் எதிர்கால இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்பதால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.