
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும். முதல் இன்னிங்ஸில் ஆஸி. 88 ரன்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா, 142 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். அவருடன் ஏதேனும் ஒரு இந்தியா பேட்ஸ்மேன் களத்தில் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடி இருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கான இலக்கு கூடி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போனது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சட்டேஷ்வர் புஜாரா, “இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தடுப்பாட்டத்தை நம்ப வேண்டும். பேட்ஸ்மேன்கள் பந்தின் லெந்த்தை முன்கூட்டியே கணிக்க வேண்டியுள்ளது. மேலும், அட்டாக் மற்றும் டிபென்ஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும். விரைந்து ரன் சேர்க்க வேண்டி பிரத்யேகமாக சில ஷாட்களை பயிற்சி செய்து வருகிறேன்.