இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி வீரர்களின் தேர்வு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்திருக்கிறார்கள். இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நான்கு ஆல் ரவுண்டர்கள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஜடேஜா, அக்சர் பட்டேல் என இரண்டு சுழற் பங்கு வீச்சு ஆல் ரவுண்டர்களும், ஹர்திக் பாண்டியா ஷர்துல் தாக்கூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன என்பதை செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “தற்போது ஒரு நாள் கிரிக்கெட் மாறி வருகிறது. அனைத்து அணிகளும் பேட்டிங் தெரிந்த வீரர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தற்போது பந்துவீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை எடுத்துக் கொண்டாலே ஏன் ஆல்ரவுண்டர்கள் அணியில் தேவை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
Trending
50 ஓவரில் நாம் 266 ரன்கள் எடுத்திருந்தோம். இன்னும் ஏதேனும் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர் இருந்திருந்தால் கூடுதலாக நமக்கு 15 ரன்கள் கிடைத்து இருக்கக் கூடும். இந்த 15 ரன்கள் என்ற வித்தியாசம் தான் அணியின் வெற்றியை நிர்ணயிக்கும். எனவே பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் குறித்து நான் பலமுறை அவர்களிடம் பேசி இருக்கிறேன். இதனால் அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு நான்கு ஆல் ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது அக்சர் பட்டேல் அணியில் இருக்கிறார். அவருக்கு உலகக்கோப்பை தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் ,அவரும் பேட்டிங்கில் கலக்குவார். ஆடுகளம் மற்றும் எதிரணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 15 பேர் கொண்ட அணியிலிருந்து சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வோம். சில போட்டிகளில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாட வேண்டிய சூழல் ஏற்படும். சில போட்டிகளில் நான்கு க்கு பதில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை போதுமானதாக இருக்கும்.
இந்த உலக கோப்பை தொடரில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் இணைந்து 20 ஓவர்கள் வீச முடியாத நிலை ஏற்படலாம். இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களுடைய முழு ஓவர்களையும் வீச முடியாத சூழல் உருவாகும். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ஆல் ரவுண்டர்களுக்கு அணியில் முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now