
இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து, உலகக்கோப்பை குறித்தான பேச்சுகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் இந்தமுறை உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் இந்திய அணிக்கு மற்ற எந்தமுறையும் இல்லாததை விட கூடுதல் அழுத்தமும், நெருக்கடியும் உண்டாகி இருக்கிறது.
மேலும் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு பிறகு, வேறு எந்த வடிவத்திலும் உலகக்கோப்பையை கைப்பற்றாத காரணத்தினால், இந்த அழுத்தமும் நெருக்கடியும் அப்படியே இரண்டு மடங்காக மாறுகிறது. தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் துவக்க வீரர்களாக விளையாடக் கூடாது. நீங்கள் மொத்த நிகழ்வையும் கொஞ்சம் அலசி பார்த்தால் புரியும். இந்த இடத்தில் பேட்டிங் ஃபார்ம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். மேல் வரிசையில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பது என்னுடைய கருத்து கிடையாது. ஆனால் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் குறைந்தது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும்.