
இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை மற்றும் அஹ்மதாபாத் ஆகிய மைதானங்களில் இருந்த பிட்ச் மிகவும் சுமாராக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் தண்டனையை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த சென்னை மைதானமும் பாகிஸ்தான் 191 ரன்களுக்கு சுருண்ட அகமதாபாத் மைதானமும் சுமாராக இருந்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.
மற்றபடி எஞ்சிய இந்திய மைதானங்கள் அனைத்தும் நன்று அல்லது மிகவும் நன்றாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் வழங்கியுள்ளது. இந்நிலையில் 300 – 350 ரன்களை அடிக்கும் பிட்ச்கள் தான் நன்றாக இருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானம் சுமாராக இருந்த போது ஐசிசி அமைதியாக இருந்ததாக தெரிவுக்கும் டிராவிட் இது பற்றி கூறுகையில், “அந்த 2 பிட்ச்களுக்கு சுமார் என்ற ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளதை நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். அவை இரண்டுமே நன்றாக இருந்ததாக நான் கருதுகிறேன். குறிப்பாக 350 ரன்களை அடித்தால் தான் அது சிறந்த பிட்ச் என்று சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.