நாக் அவுட் போட்டிகளை பற்றி இப்போது கவலைப்படவே வேண்டாம் - சுனில் கவாஸ்கர்!
இன்று இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணிக்கு இந்திய முன்னாள் மற்றும் லெஜெண்ட் வீரர் சுனில் கவாஸ்கர் மிக முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார்.
இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய ஆறாவது போட்டியில் லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று களம் இறங்குகிறது. இந்தியா அணிக்கு வழக்கம் போல் எட்டாவது இடத்தில் யார் வருவார்கள் என்கின்ற கேள்வி இந்த போட்டியிலும் தொடர்கிறது. மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்றால் சமியா அல்லது சிராஜா என்ற ஒரு கேள்வி இருக்கிறது.
மேலும் இந்திய அணி இந்த தொடர் முழுக்க இரண்டாவது பேட்டிங் செய்து வென்று வந்திருக்கிறது. முதல் பேட்டிங் செய்து சரியான இலக்கை நிர்ணயித்து, பந்துவீச்சுக்கு வந்து இலக்கைக் காப்பாற்றி இதுவரை அனுபவப்படவில்லை. எனவே கேஎல்.ராகுல் இதை ஒரு கவலையாகவே தெரிவித்திருந்தார். அவர் கூறும் பொழுது இந்திய அணி அடுத்த நான்கு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.
Trending
தற்பொழுது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், “நீங்கள் வெற்றி பெற வேண்டும் அடுத்து அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வளவு மட்டும்தான் யோசிக்க வேண்டும். நீங்கள் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்க கூடாது. நீங்கள் உண்மையில் சேசிங் செய்ய விரும்பினால் அதையே தொடர்ந்து செய்ய வேண்டும். முதலில் பேட்டிங் செய்ய வேண்டுமே என்று செய்யக்கூடாது. நாக் அவுட் போட்டிகளை பற்றி இப்போது கவலைப்படவே வேண்டாம்.
இப்பொழுது உங்கள் முன்னால் இருக்கும் இங்கிலாந்து அணியை பற்றி மட்டும் யோசிங்கள். எதிர்காலத்தைப் பற்றி நினைக்காதீர்கள். எதிர்காலம் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும். இந்த தொடர் முழுக்க இங்கிலாந்து அணிக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது துவக்கம்தான். அவர்கள் எப்படியும் இரண்டு விக்கட்டுகளை முதலிலேயே இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாக அவர்களால் ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை. பந்துவீச்சிலுமே அவர்களுக்கு ஒரு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now