ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை; விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஈசிபி!
விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மதுவிற்கி உதவிய விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்தா முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.15) ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு முன்னதாக 10 நாள் விட்ய்முறை இருந்ததால் இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி நேற்றைய தினம் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை காரணமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Trending
ஏனெனில் ரெஹான் அஹ்மத் இந்தியாவிற்கு நுழைய ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் ஏற்கனவே இந்தியா வந்து சென்றிருந்தார். தற்போது 10 தினங்களுக்குள் மீண்டும் வந்ததால் விசா பிரச்சினையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை மறுநாள் போட்டி நடைபெறவுள்ளதால், நிலமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் ரெஹான் அஹ்மதுவிற்கு 2 நாள் விசா மட்டுமே வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் ரெஹான் அஹ்மதிற்கு தற்காலிக விசா வழங்கிய அதிகாரிகளுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் இந்தியா திரும்பியபோது, ரெஹான் அஹ்மதுவின் விசா ஆவணங்களில் முரண்பாடு இருப்பதாக எங்களுக்கு விமான நிலையத்தில் அறிவுறுத்தப்பட்டது.
ராஜ்கோட் விமான நிலையத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் எங்களுக்கு ஆதரவு அளித்து, தற்காலிக விசாவில் ரெஹான் நுழைவதற்கு உதவினார்கள். அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம். மேலும் வரும் நாள்களில் ரெஹான் அஹ்மதுவின் சரியான விசாவை நாங்கள் வழங்க வேண்டும். இதன்மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் தொடர்ந்து தயாராகி வருதுடன், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now