
ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் சுலபமாக வென்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் ஸ்காட்லாந்து ஆட்டம் காட்டியது. அந்த அணியின் பவுலிங்கை ஸ்காட்லாந்து பேட்டர்கள் அடுத்தடுத்து பவுண்டரிக்கு பறக்கவிட்டனர். ஓப்பனிங் வீரர் முன்சே 53 பந்துகளில் 66 ரன்களை குவித்து நல்ல அடித்தளம் அமைக்க, கடைசி நேரத்தில் மாக்லியோட் 23 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்களை குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் கெயில் மேயர்ஸ் 20 ரன்களுக்கும், எவின் லீவிஸ் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் வீரர்கள் இதனை விட மோசமாக சொதப்பிய பிரண்டன் கிங் (17), நிகோலஸ் பூரண் (4), ஷமார் ப்ரூக்ஸ் (4), ரோவ்மன் போவெல் (5) என சொற்ப ரன்களுக்கு மோசமாக வெளியேறினர்.