
ENG v IND, 1st Test: Indian Bowlers Star In 1st Session As England Score 61/2 (Image Source: Google)
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் - டொமினிக் சிப்லி களமிறங்கினர். இந்திய அணி தரப்பில் ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய முதல் ஓவரிலேயே பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சிப்லிவுடன் கைக்கோர்த்த ஸாக் கிரௌலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.
அதன்பின் முகமது சிராஜ், ஸாக் கிரௌலியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 2ஆவது விக்கெட்டுக்கு இந்த இணை 42 ரன்கள் சேர்த்தது.