ENG vs IND, 1st Test: ரூட் அதிரடியில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்தது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 95 ரன் கூடுதலாகும்.
Trending
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி 84 ரன்னும், ஜடேஜா 56 ரன்னும் எடுத்தனர். ராபின்சன் 5 விக்கெட்டும் , ஆண்டர்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
95 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்து இருந்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் ரோரி பர்ன்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸாக் கிரௌலியும் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
பின் ஒரு முனையில் டோமினிக் சிப்லி தடுப்பாட்டத்தில் ஈடுபட, மறுமுனையில் களமிறங்கிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 56 ரன்களுடனும், டோமினிக் சிப்லி 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now