
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி தற்போது 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சின் முடிவில் 78 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 432 ரன்களை குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட இங்கிலாந்து 354 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி தற்போது 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன்பிறகு ரோகித் சர்மா புஜாராவுடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தார்.