
இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் விராட் கோலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5), ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. அதன்பின் போப் - மொயின் அலி ஜோடியின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் ஒல்லி போப் 81 ரன்னிலும் மொயின் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க 255 ரன்களுக்கு 9 விக்கெட் விழுந்தது.
கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸுடன் ஆண்டர்சன் ஜோடி சேர, ஆண்டர்சனை முடிந்தவரை மறுமுனையில் நிறுத்திவிட்டு, அதிரடியாக அடித்து ஆடிய கிறிஸ் வோக்ஸ் பவுண்டரிகளை விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 84வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து, அடுத்த ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைப்பதற்காக ரன் ஓடும்போது ரன் அவுட்டானார் கிறிஸ் வோக்ஸ்.