
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்கு சென்று அதில் இருந்து மீண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியை பெற்றது.
இதனால் 3ஆவது டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும்.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.