
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
England vs India 1st Test Dream11 Prediction: இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி லீட்ஸில் நாளை(ஜூன் 20) நடைபெறவுள்ளது.
இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட அனுபவ வீரர்களின்றி இந்திய அணியானது ஷுப்மன் கில் தலைமையில் இந்த தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஜோ ரூட், ஹாரி புரூக் போன்ற தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள நட்சத்திர வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடரின் முதல் போட்டியிலேயே எந்த அணி ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள்ன.
ENG vs IND 1st Test Match Details
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
- இடம் - லீட்ஸ் கிரிக்கெட் மைதானம், ஹெடிங்க்லே
- நேரம்- ஜூன் 20, மதியம் 3.30 மணி (இந்திய நேரப்படி)