
Joe Root Record: ஹெடிங்லேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர், ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோரின் சாதனைகளை சமன்செய்துள்ளார்.
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையிலும் உள்ளனர். இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் கடைசி இன்னிங்ஸில் அரைசதம் கடந்ததன் மூலம் சில சதனைகளையும் படைத்துள்ளார்.
அந்தவகையில் இப்போட்டியின் கடைசி இன்னிங்ஸில் ஜோ ரூட் 84 பந்துகளை எதிர்கொண்ட 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் பங்காற்றினார். இந்த அரைசதத்தைன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ஆவது இன்னிங்ஸில் ஆதிக அரைசதங்க்ளை கடந்த வீரர்கள் பட்டியலி ஜோ ரூட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 12 முறை 4ஆவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.