
ENG vs IND, 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகியுள்ளதாக அணியின் கேப்டன் ஷுப்மன் கில் உறுதிசெய்துள்ளர்.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் லியாம் டௌசனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி முந்தைய போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.