விராட் கோலியின் காயம் குறித்து பும்ரா கொடுத்த அப்டேட்!
இந்திய ஒருநாள் அணியில் விராட் கோலி கம்பேக் தருவாரா என்ற கேள்விக்கு ஜஸ்பிரித் பும்ரா சர்ச்சையான பதிலை கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2வது போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
முதல் போட்டியில் கலக்கிய இந்திய அணி அபார வெற்றி பெற்றிருப்பதால், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது ஒருநாள் போட்டியிலும் அதே வீரர்கள் தான் மீண்டும் அணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னணி வீரர் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது டி20 போட்டியின் போது விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அவர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் ஃபார்ம் மோசமாக இருந்ததால் தான் தானாக போட்டியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கோலி அடுத்த போட்டியில் ஆடுவாரா என்பது குறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசியுள்ளார். அதில், “விராட் கோலிக்கு மூன்றாவது டி20 போட்டியின்போதுதான் காயம் ஏற்பட்டது. அப்போட்டியில் நான் பங்கேற்கவில்லை. இதனால் அவரின் காயத்தின் தன்மை குறித்து எனக்கு தெரியாது. தற்போது குணமடைந்துவிட்டாரா? இல்லையா? என்பதும் எனக்கு தெரியாது.
விராட் கோலிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் 2ஆவது ஒருநாள் போட்டியின் போது அணிக்கு திரும்பிவிடுவார் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அதுகுறித்த முழுமையான விவரன் எதுவுமே தனக்கு தெரியாது” எனக்கூறிவிட்டார்.
இதனால் விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நீடித்துவருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now