
England Test Squad: பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணியின் பந்துவீச்சு துறைக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்திய இங்கிலாந்து அணி தங்களின் வெற்றிப் பயணத்தை தொடர்வதுடன் தொடரை வெல்லும் முனைப்பிலும், மறுபக்கம் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றனர்.