
India vs England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பந்த், முன்னாள் இந்திய அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெறுற்றுள்ளார்.
அந்தவகையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் 52 ரன்களைக்ச் சேர்க்கும் பட்சத்தில் சர்வ்தேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எம் எஸ் தோனிக்கு பிறகு 3ஆயிரம் ரன்களைக் கடந்த விக்கெட் கீப்பர் எனும் பெருமையை பந்த் பறவுள்ளார். முன்னதாக எம்எஸ் தோனி 4876 ரன்களைச் சேர்த்துள்ள, ரிஷப் பந்த் 43 போட்டிகளில் 2948 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.