
Shubman Gill Record: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் 25 ரன்களைச் சேர்த்தால் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யுசுஃபின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்சமயம் இங்கிலாந்து அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் 24 ரன்களைச் சேர்த்தால் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யுசுஃபின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த ஆசியா வீரர் எனும் சாதனையை முகமது யுசுஃப் தனது பெயரில் வைத்துள்ளார். அவர் கடந்த 2006ஆம் ஆண்டு 631 ரன்களைக் குவித்திருந்ததேச் இதுநாள் வரை சாதனையாக உள்ளது.