
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதியும் டி20 தொரானது ஜூன் 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கிசன் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கபட்டுள்ளது. முன்னதாக அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
அப்போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்து விசயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கஸ் அட்கின்சன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக உள்ள நிலையில், இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் முழு உடற்தகுதியை எட்டுவாரா என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளன.