
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ரும் முனைப்பிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் விரலில் ஏற்பட்ட எழும்பு முறிவு காரணமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.