IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்து. இதில் நான்காவது போட்டியில் விளையாடிய ஒல்லி ராபின்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக மார்க் வுட்டிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த போட்டியில் விளையாடிய சோயப் பஷீரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.
England's XI For The Fifth and Final Test!
— CRICKETNMORE (@cricketnmore) March 6, 2024
- Mark Wood Replaces Ollie Robinson#INDvENG #England pic.twitter.com/WJy9q7rJ8m
மேலும் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடித்தன் முலம் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜானி பேர்ஸ்டோவ் 12 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 5,974 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
Win Big, Make Your Cricket Tales Now