
England vs South Africa Playing XI: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் இரு நாட்டு பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டது. ஹாரி புரூக் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சோனி பெக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், வில் ஜேக்ஸ் ஆகியோருடன் பிரைடன் கார்ஸுக்கும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.