
இங்கிலாந்து அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தொடர்கிறார். மேற்கொண்டு ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அதேசமயம் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்திய டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், தற்சமயம் அதிலிருந்து மீண்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மார்க் வுட், சோயப் பஷீர் ஆகியோரும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர்.
England has announced a 16-player squad for the 2025/26 Ashes series! pic.twitter.com/UnT521P6zs
— CRICKETNMORE (@cricketnmore) September 23, 2025