
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோஸ் பட்லர் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மார்க் வுட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் என இரண்டு அதிவேக பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ஹாரி புருக், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
England Announce Their XI For The First T20I!#ENGvIND #INDvENG pic.twitter.com/reiYesaBJk
— CRICKETNMORE (@cricketnmore) January 21, 2025