
Cricket Image for Ind vs Eng: ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்! (England Cricket Team (Image Source: Google))
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி 3-1, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மாலன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முழங்கை காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒருநாள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.