Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெடிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது.
வருகிற ஜூன் 16ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த வருட ஆஷஸ் தொடரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற பிறகு இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வருகிறது. அதே நேரம் இங்கிலாந்து அணி கடந்த ஒன்றரை வருடங்களாக ஆக்ரோஷமான டெஸ்ட் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட் மீதான பார்வையை மொத்தமாக மாற்றி உள்ளது.
Trending
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை பென் ஸ்டாக்ஸ் ஏற்றதில் இருந்து அணியின் தலைமை பெயிற்ச்சியாளர் உடன் சேர்ந்து பாகிஸ்தான் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல முன்னணி அணிகளை அவர்களது சொந்த மண்ணில் அனாயசமாக எதிக்கொண்டு எளிதாக வெற்றியையும் கண்டுள்ளனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி: பென் டக்கெட், ஸாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜொனாதன் பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Win Big, Make Your Cricket Tales Now